சூப்பர் சிங்கர் புகழ் நித்யஸ்ரீயா இது?.. குத்தாட்ட வீடியோ இணையத்தில் வைரல்
விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் மக்கள் மனதில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
தமிழ் சினிமாவில் இப்போது கலக்கிவரும் நிறைய இளம் பாடகர்களை இந்த மேடை தான் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பாடல் நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் தான் பாடகி நித்யஸ்ரீ.
தற்போது இவர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தின் பாப்புலர் பாடலான கனிமா பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.