சினிமா மோகம்!! மருத்துவத்தை உதறிவிட்டு நடிகையான தமிழ் ஹீரோயின்கள் யார் யார்?
சின்னத்திரையானாலும் வெள்ளித்திரையானாலும் சரி, நடிப்பின் மீது ஏற்படும் மோகத்தால் பல பெண்கள் தான் செய்து வந்த படிப்பு, வேலை எல்லாத்தையும் விட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அப்படி பல வருடங்களாக மருத்துவ படிப்பை படித்து முடித்துவிட்டு நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவில் நட்சத்திரங்களாக தற்போது திகழ்ந்து வருகிறார்கள். அப்படி மருத்துவ படிப்பை விட்டு நடிக்க வந்த நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம்..
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிற்கு சென்றுள்ள நடிகை சாய் பல்லவி, மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் போதே 2015ல் பிரேமம் படத்தில் நடிகையாக அறிமுகமாகினார். 2016 ஆம் ஆண்டு ஜார்ஜியாவின் திபிலிசி மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் தனது எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்கிறார் சாய் பல்லவி.
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக இளம் வயதிலேயே கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை ஸ்ரீலீலா, 2021ல் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சினிமாமீதுள்ள ஆர்வத்தால் திரைப்படங்களில் நடிக்க துவங்கி, தற்போது பராசக்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநர் சங்கர் மகளான அதிதி சங்கர், மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்டு விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
2016-இல் எர்ணாகுளத்தில் உள்ள ஸ்ரீ நாராயணா மருத்துவ அறிவியல் கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சினிமா மீதுள்ள ஆர்வத்தால் தென்னிந்திய சினிமாவில் நடிக்க துவங்கினார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
தென்னிந்திய நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை மீனாட்சி செளத்ரி, பஞ்சாபின் தேரா பாசியில் உள்ள தேசிய பல் மருத்துவக் கல்லூரியில் பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் (BDS) பெற்று பின் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
ஸ்டெம் செல் உயிரியலில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் சென்னையில் கண் மருத்துவமனை ஒன்றில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்த நடிகை வித்யா பிரதீப், சைவம் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார். ஒருசில சீரியல்களிலும் நடித்து பிரபலமானார் வித்யா பிரதீப்.
தமிழில் 2022 இல் வெளியான அன்பறிவு திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்த நடிகை ஷிவானி ராஜசேகர் 2024 பிப்ரவரி மாதத்தில் அப்பல்லோ மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துள்ளார்.