மாமன்னன் ரத்னவேலு போல கொண்டாடப்படும் மங்கபதி கேரக்டர்..! ஆனால், ஒரு ட்விஸ்ட்..
சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் களத்தில் வெளியான கோர்ட் ஸ்டேட் vs நோபடி ( Court - State Vs A Nobody ) என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. மிகவும் விறுவிறுப்பான, சுவாரசியமான காட்சிகள், எதிர்பாராத திருப்பங்கள் என ஒரு முழுமையான திரைப்படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
ஆனால் இந்த படத்தில் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தை விடவும் வில்லன் கதாபாத்திரமான மங்கபதி என்ற கதாபாத்திரத்தை இணையவாசிகள் கொண்டாடி வருகிறார்கள்.
இதேபோல, கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான மாமன்னன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஃபகத்பாசிளில் கதாபாத்திரமான ரத்தினவேலு கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. மாமன்னன் படத்தின் ஹீரோவை காட்டிலும் ரத்தினவேலுவை ரசிகர்கள் பலரும் கொண்டாடினார்கள்.
இதற்கு முக்கியமான காரணம் ஆதிக்க சாதி என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில சமூகத்தினர் ரத்தினவேல் கதாபாத்திரத்தை கொண்டாடினார்கள் என்று பரவலாக பேசப்பட்டது.
அதே சமயம் சாதிய ஒடுக்கு முறைகளை படமாக்குகிறோம் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தினர் இடையே தொடர்ந்து வன்மம் பரப்பும் விதமாக இயக்குனர்கள் சிலர் படங்களை வெளியிட்டு லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இப்படியான கொண்டாட்டங்கள் பார்க்கப்படுகிறது என்று ஒரு தரப்பினர் கூறினார்கள். அதன் பிறகு தற்போது இந்த மங்கபதி என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கதைப்படி, 18 வயது பூர்த்தியாக ஒரு பெண் கதாநாயகனை காதலிக்கிறாள். கதாநாயகனிடம் தன்னுடைய முகத்தை காட்டாமல் தொலைபேசி வாயிலாகவே காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார் கதாநாயகி. ஒரு கட்டத்தில் கதாநாயகனுக்கு இந்த பெண் தான் என்று தெரிந்து விடுகிறது.
ஆனால், அந்த பெண் தன்னுடைய அப்பா வேலை செய்யும் முதலாளியின் உறவினர் பெண் என்று தெரிகிறது. ஆனாலும், அந்த பெண்ணை காதலிக்கிறார் அந்த ஹீரோ. ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் முதலாளி வீட்டுக்கு தெரிய வருகிறது.
அந்த முதலாளி யார் என்று கேட்டால் இந்த வில்லன் கேரக்டரான மங்கபதி கதாபாத்திரம் தான். இதனை தொடர்ந்து தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்து ஹீரோ மீது போக்சோ வழக்கை பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார் வில்லன் மங்கபதி.
கிட்டத்தட்ட ஹீரோ மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதியாகிவிட்டது. தீர்ப்பு எழுதும் நாளும் வந்துவிட்டது. அந்த நாளில் ஒரு புதிய வழக்கறிஞர் ஹீரோவுக்கு ஆதரவாக வாதாட முன் வருகிறார்.
அதன் பிறகு நீதிமன்றத்தில் நடக்கக்கூடிய சுவாரசியமான சம்பவங்களும் கடைசியில் ஹீரோ இந்த வழக்கிலிருந்து தப்பித்தாரா இல்லையா என்பதும் தான் இந்த படத்தின் மீதிக்கதை.
இந்த ஒட்டுமொத்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் என் வலுவான கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது என்பது இந்த படத்தில் வெற்றிக்கு முக்கியமான காரணம்.
ஆனால், தற்போது அந்த வில்லன் கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாட தொடங்கி இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. இதில் மாமன்னன் ரத்தினவேலுக்கும் இந்த மங்கபதி கதாபாத்திரத்திற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.
அது, என்னவென்றால் மாமன்னன் ரத்தினவேலுவை ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதி மனப்பான்மை கொண்ட சமூகத்தினர் கொண்டாடினார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால், இந்த மங்கபதி கதாபாத்திரத்தை பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு தந்தையும் கொண்டாடுவார்கள் என்று ரசிகர்கள் மங்கபதி கேரக்தரை கொண்டாடி வருகிறார்கள்.