மமிதா பைஜூவின் அந்த புகைப்படம்.. சிக்கிய வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன்

மமிதா பைஜூவின் அந்த புகைப்படம்.. சிக்கிய வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன்

ப்ரேமலு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை மமிதா பைஜூ. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு தமிழில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில், தளபதி விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் அப்டேட் வரப்போகிறது என்றும் சமீபத்தில் கூறியிருந்தார். 

மேலும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து இரண்டு வானம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இ்ந்நிலையில், சினிமா குறித்த அப்டேட்களை அளித்து வரும் வலைப்பேச்சு யூடியூப் சேனலில் ஏஐ மூலம் தவறாக சித்தரிக்கப்பட்ட மமிதா பைஜூவின் புகைப்படம் வெளியாகி தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. 

இதில், பிஸ்மி, அந்தணன் மற்றும் சக்தி ஆகியோர் ஷங்கரின் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தில் மமிதா நடிப்பது குறித்து பேசும்போது அந்த செய்தியின் நடுவே மமிதா தவறாக சித்தரிக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

இதனை கண்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இதுதான் மஞ்சள் பத்திரிகை எனவும் குறிப்பிட்டு வருகின்றனர். 

LATEST News

Trending News