தந்தை மீது வெறுப்பு, 3 காதல், ஒரு நிச்சயதார்த்தம்... 53 வயதிலும் சிங்கிளாக இருக்கும் நடிகை.. காரணம் என்ன தெரியுமா..?

தந்தை மீது வெறுப்பு, 3 காதல், ஒரு நிச்சயதார்த்தம்... 53 வயதிலும் சிங்கிளாக இருக்கும் நடிகை.. காரணம் என்ன தெரியுமா..?

இந்திய திரையுலகில் ஜீனத் அமன் முதல் ஷபானா ஆஸ்மி வரை, பல நடிகைகள் தங்களது வலுவான பெண் கதாபாத்திரங்கள் மூலம் சமூகக் கட்டமைப்புகளை உடைத்தெறிந்து சாதனை படைத்துள்ளனர். 

அவர்களில் குறிப்பிடத்தக்கவர் தபாஸும் பாத்திமா ஹாஷ்மி, அனைவராலும் தபு என்று அறியப்படும் இவர், ஹிந்தி சினிமாவில் தனது வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களுக்காக கொண்டாடப்படுகிறார். 

reason-behind-why-tabu-is-still-singleசாந்தினி பார் படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தாலும் சரி, மாச்சிஸ் படத்தில் தற்கொலை குண்டுதாரியாக நடித்தாலும் சரி, தபு தொடர்ந்து அசாதாரணமான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு தனி பாதையை வகுத்துக் கொண்டார்.  

1971 நவம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார் தபு. அவரது தந்தை ஜமால் அலி ஹாஷ்மி, பாகிஸ்தானில் நடிகராக இருந்தார், பின்னர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். தபுவுக்கு மூன்று வயதாக இருக்கும்போதே அவரது தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். 

அதனால் தபுவை அவரது தாயார் தான் தனியாக வளர்த்தார். நடிகை தபு தனது பெயருடன் தனது தந்தையின் குடும்பப் பெயரை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. சிமி கரேவாலுடன் அவர் கலந்து கொண்ட ரெண்டேஸ்வஸ் வித் சிமி கரேவால் நிகழ்ச்சியில் இது குறித்து பேசிய தபு, “நான் உண்மையில் அதை பயன்படுத்தியது இல்லை. 

எனக்கு என் தந்தையின் குடும்பப் பெயரைப் பயன்படுத்துவது முக்கியம் என்று நான் நினைத்ததில்லை. தபாஸும் பாத்திமா என்பதுதான் எப்போதும் எனது பெயராக இருந்தது. பாத்திமா என்பது எனது நடுப்பெயர். 

பள்ளியில் பாத்திமா என்பது எனது குடும்பப்பெயராக இருந்தது. எனக்கு அவரைப் பற்றி எந்த நினைவுகளும் இல்லை. என் சகோதரி அவரை எப்போதாவது சந்தித்திருக்கிறாள். 

 ஆனால் நான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை. அவரைப் பற்றி எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. நான் எப்படி இருக்கிறேனோ, எப்படி வளர்ந்தேனோ அதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் என் வாழ்க்கையில் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன்" என்று கூறினார்.  

reason-behind-why-tabu-is-still-singleதபு ஹிந்தி சினிமா ரசிகர்களை மட்டும் மயக்கவில்லை, நின்னே பெல்லடட்டா, காலாபாணி, காதல் தேசம், இருவர் மற்றும் பல பிராந்திய மொழி படங்களில் நடித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார். 

வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பெயர் பெற்ற தபு, பிரேம், ஹக்கீக்கத், ஹிம்மத், ஜீத், மக்பூல், தி நேம்சேக், சீனி கம், ஹைதர் மற்றும் இன்னும் பல வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களில் நடித்துள்ளார்.  

நான்கு தசாப்தங்களுக்கும் மேலான திரையுலக வாழ்க்கையில், தபுவின் பெயர் பல பிரபலங்களுடன் இணைத்து பேசப்பட்டது. அவரது முதல் தீவிரமான காதல் நடிகர் சஞ்சய் கபூருடன் மலர்ந்தது. இருவரும் பிரேம் திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கும் போது டேட்டிங் செய்யத் தொடங்கினர். 

ஆனால் குறுகிய காலத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தயாரிப்பாளர் சாஜித் நாடியாட்வாலாவுடனும் தபுவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஜீத் திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியபோது நெருக்கம் அதிகரித்தது. 

reason-behind-why-tabu-is-still-singleசில அறிக்கைகளின்படி, இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்ததாகவும், ஆனால் சாஜித் தனது மறைந்த மனைவி திவ்யா பாரதி மீது இன்னும் காதல் கொண்டிருந்ததால் தபுவை திருமணம் செய்து கொள்ள தயங்கினார் என்று சொல்லப்படுகிறது. 

இருப்பினும், நிச்சயதார்த்தம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. தென்னிந்திய சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகார்ஜுனாவுடனும் தபுவுக்கு இருந்த உறவு பலரின் புருவங்களையும் உயர்த்தியது. தபு ஒரு நிலையான உறவை விரும்பியதாகவும், ஆனால் நாகார்ஜுனாவால் தனது முந்தைய திருமணங்கள் காரணமாக உறுதியளிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. 

 சுமார் 10 வருடங்கள் காதலித்த பின்னர், இந்த ஜோடி பிரிந்து சென்றது. தற்போது 53 வயதாகும் தபு திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். இருப்பினும், தனது துணிச்சலான கதாபாத்திரங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தேர்வுகள் மூலம் தபு பல பெண்களுக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்.

LATEST News

Trending News