பிக்பாஸ் 8வது சீசன் தொடர்பில் அறிவிப்பை வெளியிட்ட தொலைக்காட்சி... இன்று மாலை 6 மணிக்கா......
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் அந்த ஷோக்களில் ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு ஷோ பிக்பாஸ்.
மக்கள் அதிகம் விரும்பும் ஷோ இது என்று சொன்னால் எல்லோருமே நம்புவார்கள். 7வது சீசன் நிறைய சண்டைகளுடன் எப்படியோ முடிந்துவிட்டது.
இந்த சீசன் வின்னராக வைல்ட் கார்ட்டு மூலம் என்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டார்.
இன்று மாலை 6:00 மணிக்கு.. 😉 pic.twitter.com/EVuAwJB4i6
— Vijay Television (@vijaytelevision) September 4, 2024
7வது சீசன் முடிந்த சில மாதங்களில் 8வது சீசன் குறித்த விஷயங்கள் தான் மக்களிடம் அதிகம் பேசப்படுகிறது.
தற்போது 8வது சீசன் பற்றிய பேச்சு மக்களிடம் அதிகம் நடந்துவரும் நிலையில் தொலைக்காட்சி தரப்பில் இருந்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.
அதாவது கமல்ஹாசன் பிக்பாஸில் இருந்து விலகிய நிலையில் அடுத்த தொகுப்பாளர் யார் என்று இப்போது வரை தெரியவில்லை.
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கத்தில் அடுத்த Host யார் என்பதை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க இருப்பதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.