தளபதி69ல் இத்தனை நடிகைகளா? ரூட்டைப்பிடித்த நடிகை சமந்தா..
விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படம் ரிலீஸ் ஆகி 300 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது.
இப்படத்தினை தொடர்ந்து 69வது படத்தில் நடித்து முடித்துவிட்டு முழுநேர ஆரசியலில் ஈடுபடவிருக்கிறார் விஜய். இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியான நிலையில். இப்படத்தில் நடிக்க இருக்கும் நாயகிகளின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
திரிஷா, சினேகா, லைலா போன்ற நடிகைகளை தொடர்ந்து தற்போது நடிகை சிம்ரன் 69வது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெறி, மெர்சல், கத்தி உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை சமந்தாவும் நடிக்கவுள்ளாராம்.
மேலும் பிரேமலு படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை மமிதா பைஜுவும் நடிக்கவிருக்கிறாராம்.