அருகில் அந்த உறுப்பை காட்டி.. இங்கே முத்தம் கொடு என கேட்டார்.. மாளவிகாவுக்கு நடந்தது என்ன?
தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர்.
பின்னர் தனுஷுடன் மாறன், விக்ரமுடன் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் இந்தப் படங்கள் அவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியைத் தரவில்லை.
தற்போது சர்தார் 2 படத்தில் பெரும் நம்பிக்கையுடன் நடித்து வருகிறார். இந்நிலையில், மும்பையில் கல்லூரி பயின்ற காலத்தில் தான் சந்தித்த அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார், இது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
மாளவிகா, தற்போது தனக்கு சொந்த கார் மற்றும் ஓட்டுநர் இருப்பதால் மும்பை பாதுகாப்பானது என உணர்வதாகக் கூறுகிறார். ஆனால், கல்லூரி காலத்தில் இந்தப் பாதுகாப்பு உணர்வு இல்லை என்கிறார்.
ஒரு முறை, நண்பர்களுடன் உள்ளூர் ரயிலில் பயணித்தபோது, ஒரு நபர் ஜன்னல் வழியாக அவர்களைப் பார்த்து, கம்பிகளுக்கு அருகே முகத்தை கொண்டு எனக்கு ஒரு முத்தம் கோடி.. எனக் கேட்டதாக விவரிக்கிறார்.
இந்தச் சம்பவம் அவரை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது, பொது இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களை எடுத்துக்காட்டுகிறது.
இந்த அனுபவம், மும்பை போன்ற பெருநகரங்களில் கூட பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மாளவிகாவின் பகிர்வு, சமூகத்தில் இன்னும் மாற வேண்டிய மனநிலைகளைப் பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
ஒரு பிரபல நடிகையாக இருந்தாலும், அவரது இளமைக் கால அனுபவம், பெண்களின் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகளுக்கு வலு சேர்க்கிறது. இவர் தற்போது சர்தார் 2 படத்தில் தனது திறமையை நிரூபிக்கக் காத்திருக்கிறார்,
அதே நேரம் இது போன்ற பகிர்வுகள் அவரை மக்களுக்கு இன்னும் நெருக்கமாக்குகின்றன.
 
                         
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        