மணிமேகலையை அவமானப்படுத்திய தொகுப்பாளர் யார், Cook With Comali-லிருந்து வெளியேற அவர் தான் காரணமா
சின்னத்திரையில் மணிமேகலை தன் துறுதுறு பேச்சால் ரசிகர்களை கட்டி போட்டவர்.
சன் மியூஸிகில் தொகுப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கி, விஜய் டிவி-ல் குக் வித் கோமாளி மூலம் உச்சம் தொட்டு, ஹுசைன் என்ற நபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு இன்று வாழ்க்கையில் கடின உழைப்பால் நல்ல நிலைமைக்கு வந்துள்ளார்.
இவர் குக் வித் கோமாளியில் கோமாளியாக இருந்து தற்போது தொகுப்பாளராக இருக்க, நேற்று, சுய மரியாதை இல்லாத இடத்தில் என்னால் இனி இருக்க முடியாது.
நிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளார் தானே தெரிய வேண்டும் என்று சில விஷயம் செய்ய, அது என் சுயமரியாதையை சீண்டும் விதத்தில் உள்ளது என மணிமேகலை சொல்லி குக் வித் கோமாளியிலிருந்து வெளியேற, ரசிகர்கள் அனைவரும் அந்த தொகுப்பாளர் ப்ரியங்கா தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.