அசிங்கப்பட்டதே போதும்!! ஸ்பீடு இயக்குனரால் படாதபாடு பட்டு எஸ்கேப் ஆன மான் பட நடிகை..

அசிங்கப்பட்டதே போதும்!! ஸ்பீடு இயக்குனரால் படாதபாடு பட்டு எஸ்கேப் ஆன மான் பட நடிகை..

தமிழ் சினிமாவில் அருவாவை வைத்து படங்களை எடுத்து வந்த ஸ்பீடு இயக்குனருக்கு சுத்தமாக அறிவு மழுங்கி போய்விட்டதாக மான் பட நடிகை ஒருவர் கூறியிருக்கிறாராம். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்த பல ஆண்டுகளாகியும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்திருக்கிறார் அந்த மான் பட நடிகை.

அந்த இயக்குனர் வரிசையாக தனது படத்தில் அந்த நடிகையை நடிக்க வைத்து வரும் நிலையில், மான் நடிகைக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்காததால் தற்போது அந்த இயக்குனரை கழட்டிவிட முடிவெடுத்துள்ளாராம்.

சமீபத்தில் அந்த இயக்குனரின் படத்தில் டபுள் ஆக்‌ஷன் ரோலில் நடித்ததை பலரும் பயங்கரமாக ட்ரோல் செய்து வந்துள்ளனர். இதனால் கடுப்பாகிய மான் நடிகை பிரமோஷனுக்கே வராமல் இழுத்தடித்திருக்கிறார். இதற்கு காரணம் அந்த இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணமாம்.

இந்நிலையில் இன்னொரு படத்தில் அந்த நடிகையை நடிக்க வைக்க ஸ்பீடு இயக்குனர் முடிவெடுத்துள்ளாராம். ஏற்கனவே நடித்த படத்தில் எந்தளவுக்கு படாதாபாடு படுத்த முடியுமா அந்த அளவிற்கு படுத்தி இருக்கிறாராம். இதனை அறிந்த அந்த மான் பட நடிகை கால் செய்த இயக்குனரை கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார்.

நடிகையை புக் செய்துவிடலாம் என்று அவரையும் அவரது மேனேஜரையும் தொடர்பு கொள்ள நினைத்தால் பிடிக்கவே முடியவில்லையாம். நடிகையின் மேனெஜர் நாசுக்காக வேறு நடிகையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES