34 வயதில் ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு திருமணமா.. மாப்பிள்ளை யார் தெரியுமா..
தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பெரும்பாலும் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவர் முதன் முதலில் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் பின் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு தனது நடன திறமையை வெளிப்படுத்தினார். இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கானாவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையத்தில் பரவப்படும் இந்த செய்தியில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.