மனைவி கொடுமையால் விவாகரத்து பெற்ற பிரபலங்கள்: அந்த உலக புகழ் நடிகரும் லிஸ்ட்டில் இருக்காரே
மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் விவாகரத்து பெற்ற பிரபலங்கள் யார், யாரென்று பார்க்கலாம்
குணால் கபூர்
மாஸ்டர் ஷெஃப் நிகழ்ச்சி பிரபலம் குணால் கபூருக்கும், மனைவிக்கும் விவாகரத்து கிடைத்திருக்கிறது. குணாலை அவரின் மனைவி கொடுமைப்படுத்தியதன் அடிப்படையில் விவாகரத்து வழங்கியிருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம். குணால் கபூருக்கு கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். குணால் கபூரின் விவாகரத்து பற்றி தான் இந்தி ரசிகர்கள் தற்போது பேசி வருகிறார்கள்.
ஜானி டெப்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பும், நடிகை ஆம்பர் ஹெர்டும் சில ஆண்டுகளாக காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இதையடுத்து ஜானி டெப் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகக் கூறி விவாகரத்து கேட்டார் ஆம்பர். நான் ஆம்பரை கொடுமைப்படுத்தவில்லை அவர் தான் என்னை கொடுமைப்படுத்துகிறார் என ஜானி டெப் தெரிவித்தார். இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு அவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது.
சயிஃப் அலி கான்
காதல் திருமணம் செய்து 13 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானும், நடிகை அம்ரிதா சிங்கும் கடந்த 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். அவர்களுக்கு சாரா என்கிற மகளும், இப்ராஹிம் என்கிற மகனும் இருக்கிறார்கள். அம்ரிதா தன்னை கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தார் சயிஃப் அலி கான். அம்ரிதா செய்த கொடுமை தன்னை மனதளவில் பாதித்ததாக பேட்டி அளித்தார் சயிஃப். தான் தொடர்ந்து அசிங்கப்படுத்தப்பட்டதாக கூறினார் சயிஃப்.
ஷிகர் தவான்
பிரபல கிரிக்கெட் வீரரான ஷிகர் தவானை மனைவி கொடுமைப்படுத்தியதால் அவருக்கு கடந்த 2023ம் ஆண்டு விவாகரத்து அளித்தது டெல்லி உயர் நீதிமன்றம். ஆயிஷா முகர்ஜிக்கும், ஷிகர் தவானுக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றனர். தங்கள் மகன் ஜொராவரை தன்னுடன் ஆஸ்திரேலியாவில் வைத்துக் கொண்டு தன்னை மனதளவில் கொடுமைப்படுத்தினார் ஆயிஷா என்றார் ஷிகர் தவான். அவர் சொன்ன புகாரை எதிர்த்து ஆயிஷா எதுவும் சொல்லவில்லை. இதையடுத்தே ஆயிஷா மீது ஷிகர் தவான் தெரிவித்த புகாரை ஏற்று விவாகரத்து அளித்தது நீதிமன்றம்.