10 ஆண்டுகளாக காதலிக்கிறேன்!! நடிகர் சாய் பல்லவியின் காதலர் யார் தெரியுமா..
மலையாள சினிமாவில் 2015ல் வெளியாகி மிகப்பெரிய காதல் படமாக கொண்டாடப்பட்ட படம் பிரேமம். இப்படத்தில் மலர் டீச்சர் என்ற ரோலில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை சாய் பல்லவி.
நடன கலைஞராக அறிமுகமாகி, தற்போது டாப் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் சாய் பல்லவி. மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று நடித்து வரும் சாய் பல்லவியின் தங்கைக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
சமீபத்தில் மகாபாரதம் பற்றிய சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளாக அபிமன்யுவை பற்றி நிறைய படித்து அறிந்துள்ளேன் என்றும் அவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் கூறியிருக்கிறார் நடிகை சாய் பல்லவி.