நான் ஹார்மோன் ஊசி போட்டேனா? மனம் திறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி!

நான் ஹார்மோன் ஊசி போட்டேனா? மனம் திறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி!

சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா மோத்வானி சிறுவயது முதலே தன்னைத் துரத்திக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய கேள்விக்குப் பதிலளித்துள்ளார். அவருடைய இந்தப் பதில் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி இதுவரை 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். தமிழில் நடிகர் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னைக் குறித்து ஒரு முக்கியக் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதாவது 1991 இல் பிறந்து பின்னர் 2004 முதல் பல்வேறு இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஹன்சிகா பங்கேற்று நடித்துள்ளார். அடுத்து 2007 இல் ஹிமேஷ் ரேஷம்மியாவுடன் இணைந்து ‘ஆப் கா சுரூர்‘ எனும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்நிலையில் சிறிய வயதிலேயே ஹீரோயினாகிவிட்ட நடிகை ஹன்சிகா குறித்து, நடிகை ஹன்சிகாவிற்கு அவருடைய அம்மா ஹார்மோன் ஊசி போட்டார் என்றும் அதனால்தான் அவர் சிறிய வயதிலேயே உடல் வளர்ச்சியை பெற முடிந்தது என்றும் சில சமூகஊடகங்களில் வதந்திகள் பரவியதாகக் கூறப்படுகிறது.

நடிகை ஹன்சிகா தனது ஆரம்பக்கட்டத்தில் வைக்கப்பட்ட இந்த வதந்திக்குத்தான் தற்போது பதிலளித்துள்ளார். ‘அதில் உண்மையில்லை. ஊசிக்கு பயப்படும் நான் இதுவரை டாட்டூ கூட போட்டதில்லை. பிரபலமாக இருப்பதால் இதுபோன்ற வதந்திகள் பரவுகின்றன. என்னுடை ஆரம்பக் கட்டத்தில் இதுபோன்ற வதந்திகளால் மிகவும் வருத்தப்பட்டேன்’ என்று நடிகை ஹன்சிகா பதிலளித்துள்ளார்.

நடிகை ஹன்சிகாவிற்கு முன்பே ஹார்மோன் ஊசி குறித்து நேர்காணல் ஒன்றில் பதிலளித்த அவருடைய அம்மா மோனா ஹன்சிகா ‘வளர வேண்டும் என்பதற்காக ஊசி போட்டதாக என்மீது குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில் ஒரு தாய் இப்படி செய்ய முடியுமா? என்று கேள்வி எழுப்பி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES