50 கோடி ரூபாயில் நயன்தாராவின் புதிய வீடு.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா..

50 கோடி ரூபாயில் நயன்தாராவின் புதிய வீடு.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த முன்னணி நடிகையான நடிகை நயன்தாரா தற்போது பாலிவுட் படத்திலும் நடித்து பல வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்.


தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதோடு மட்டுமல்லாமல் இவருக்கு அதிகளவு ரசிகர்கள் வட்டாரம் உள்ளது என்பதும் உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

அண்மையில் நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் சரியாக ஓடாமல் பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்றது. இதனை அடுத்து ஓடிடி தளத்தில் வெளியானது. அங்கும் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து படம் சரியான வெற்றியை தரவில்லை.

இதனை அடுத்து இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் சரியான வெற்றியை தரவில்லை என்ற சர்ச்சை ஏற்பட்டது. எனினும் அதைப் பற்றி கவலைப்படாமல் புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார்.


திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் வெப் சீரியல்களில் நடிக்கக்கூடிய இவர் பல தொழில்களில் பணத்தை முதலீடு செய்திருப்பதோடு மிகச்சிறந்த தொழில் முனைவோராக திகழ்கிறார்.

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினியாக நடித்து வரும் இவர் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது சிறப்பான நடிப்புக்காக இவருக்கு ஃபிலிம் பேர் விருது, நந்தி விருது என பல விருதுகளை வென்றிருக்கிறார்.


ஹீரோயின்களை மட்டும் மையப்படுத்தி வெளி வந்த ஐரா, கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், அறம் போன்ற படங்களில் நடித்து வெற்றிவாகை சூடியவர். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு வாடகைத் தாயின் மூலம் தாயாராக மாறி இருக்கிறார்.

இவரின் சொத்து மதிப்பை பார்க்கும் போது பலருக்கும் ஆச்சரியம் ஏற்படும். ஏறக்குறைய 200 கோடி அளவு சொத்து மதிப்பு உடைய இவருக்கு 100 கோடி மதிப்புள்ள வீடும் உள்ளது. இவர் தமிழ்நாடு மட்டுமல்லாமல் மும்பையிலும் ஆடம்பர வீடுகளை வாங்கி இருக்கிறார்.

தற்போது இவர் விக்னேஷ் சிவனோடு சென்னையில் வசித்து வரும் நிலையில் இவருக்கு 100 கோடி மதிப்பீட்டில் 4BHK பிளாட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டில் ஒரு திரையரங்கம், நீச்சல் குளம், ஜிம் போன்ற பிரத்யேக வசதிகள் காணப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஹைதராபாதத்திலும் நயன்தாராவிற்கு இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. அவை ஒவ்வொன்றும் சுமார் 30 கோடி மதிப்புடையவை என்று சொல்லலாம். வீடுகள் மட்டுமல்லாமல் 1.76 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 7 கார் வகைகளை வைத்திருக்கக்கூடிய இவர் பிஎம்டபிள்யூ ஐந்து ஒரு கோடி மதிப்புள்ள மெசெடியஸ் ஜிஎல் 350 டி போன்ற உயர் ரக சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார்.


இவ்வளவு ஏன் தனியார் ஜெட் விமானம் வைத்திருக்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். இவரிடம் 50 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானம் உள்ளது. இந்த விஷயங்களை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டதோடு பாலிவுட் நடிகைகளுக்கு நிகராக இவரிடம் தனி ஜெட்லி மானம் இருக்கிறதா? என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES