நீ விஜய்யுடன் நடிச்சாலே பிளாப் தான்: ரசிகரின் விமர்சனத்திற்கு யோகிபாபுவின் கூலான பதில்!

நீ விஜய்யுடன் நடிச்சாலே பிளாப் தான்: ரசிகரின் விமர்சனத்திற்கு யோகிபாபுவின் கூலான பதில்!

நீ விஜய்யுடன் நடிச்சாலே பிளாப் தான் என ரசிகர் ஒருவரின் காட்டமான விமர்சனத்திற்கு நடிகர் யோகி பாபு கூலான பதில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் யோகி பாபு நடிக்கவிருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இதனை யோகிபாபுவே தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் .

இந்த நிலையில் யோகிபாபுவின் இந்த டுவிட்டுக்கு கமெண்ட் அளித்த ரசிகர் ஒருவர், ‘நீ விஜய் கூட நடிச்ச சர்கார், பிகில், பீஸ்ட் ஆகிய 3 படமும் பிளாப் என்றும், மூன்று படத்தின் இயக்குனர்களூம் அவுட் என்றும் காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு நடிகர் யோகி பாபு கூலாக ’தேங்க்ப்பா’ என்று ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ளார். ரசிகரின் காட்டமான விமர்சனத்தை கூட சகஜமாக எடுத்துக்கொண்ட யோகிபாபு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES