லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் ரெடி.. அதுவும் இவ்ளோ பிரம்மாண்டமா...

லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் ரெடி.. அதுவும் இவ்ளோ பிரம்மாண்டமா...

லெஜண்ட் படத்தின் மூலமாக ஹீரோவாக களமிறங்கியவர் சரவணன். அவரது கடை விளம்பரங்களில் நடித்து பிரபலமான அவர் தனது சொந்த தயாரிப்பிலேயே லெஜண்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.

அந்த படம் 2022 ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்திற்கு தியேட்டர்களில் சுமாரான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது. மேலும் தற்போது டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடியில் லெஜண்ட் படம் வெளியாகி இருக்கிறது.

லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் ரெடி.. அதுவும் இவ்ளோ பிரம்மாண்டமா | Legend Saravanan To Launch 2Nd Movie Soonலெஜண்ட் சரவணன் எப்போது அடுத்த பட அறிவிப்பை வெளியிடப்போகிறார் என எதிர்பார்ப்பு இருந்துவரும் நிலையில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போது புது லுக்கில் வந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரல் ஆனது.

தனது இரண்டாவது படத்திற்கான கதையை இறுதி செய்யும் பணியில் லெஜண்ட் ஈடுபட்டு வந்த நிலையில் ஒரு கதையை தற்போது தேர்வு செய்து ஓகே சொல்லிவிட்டாராம்.

அந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தகவல் வந்திருக்கிறது. இந்த படத்தையும் அவர் பெரிய அளவில் பிரம்மாண்டமாக எடுக்க திட்டம் போட்டிருக்கிறாராம். ஹீரோயினாக ஒரு முன்னணி நடிகை தேர்வாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News