எனக்கு அது இல்லவே இல்ல.. திருமணம் குறித்த கேள்விக்கு குண்டை தூக்கி போட்டு ஐஸ்வர்யா லட்சுமி..

எனக்கு அது இல்லவே இல்ல.. திருமணம் குறித்த கேள்விக்கு குண்டை தூக்கி போட்டு ஐஸ்வர்யா லட்சுமி..

இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பலரும் முரட்டு சிங்கிளாகவே வாழ விரும்புகின்றனர். எதற்காக திருமணம், கணவர், பிள்ளைகள், குடும்பம் என்ற கட்டுகளுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டும் என்று யோசிக்க துவங்கி விடுகின்றனர்.

ஏனெனில் பல நடிகைகளின் திருமண வாழ்க்கை விவாகரத்தில்தான் முடிவடைகிறது. பல நடிகைகளின் வரலாற்றை புரட்டி பார்த்தால் 2 திருமணம், 3 திருமணம் என எண்ணிக்கை கூடிக்கொண்டு தான் போகிறது. சில ஆண்டுகள் மட்டும் கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்ந்துவிட்டு பிறகு பிரிவதற்காக எதற்கு திருமணம் செய்ய வேண்டும் என்றும் யோசிக்கின்றனர்.

இதில் சைக்காலஜி ரீதியாகவும் யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. ஒருவர் மீது எவ்வளவு விருப்பமும், ஆர்வமோ இருக்கிறதோ அதே அளவுக்கு வெறுப்பும், கோபமும் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

இப்படி காதலித்த பல நடிகர், நடிகையர் பிரிந்து போன சரித்திரம், தமிழ் சினிமாவிலேயே நிறைய இருக்கின்றன. குறிப்பாக நளினி – ராமராஜன், சீதா – பார்த்திபன், மஞ்சு வாரியார் – திலீப் – கமல்ஹாசன் – வாணி கணபதி, கமல்ஹாசன் – சரிகா, கமல்ஹாசன் – கௌதமி, சரத்குமார் – சாயா தேவி, ராதிகா – பிரதாப் போத்தன் இப்படி பல பேரை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்போதும் தமிழ் சினிமாவில் கோவை சரளா முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். நடிகை ஜெயலலிதா திருமணம் செய்துக்கொள்ளவில்லை. 40 வயதாகியும் திரிஷா முரட்டு சிங்கிளாக இருக்கிறார். கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை.

அந்த வகையில் கேரளாவை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும், திருமணம் செய்யப் போவதில்லை, என்ற ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்திருக்கிறார்.
மாடலிங் துறையில் இருந்து மலையாள படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டாகுஸ்தி போன்ற வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில், திருமணம் செய்வது குறித்த கேள்விக்கு ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது, எனக்கு திருமணம் குறித்த ஐடியாவே இல்லை. அதனால் திருமணத்துக்கு முன், திருமணத்துக்கு பின் என்ற கான்செப்ட்டும் இல்லை.

ஆனால் வாழ்க்கையில் ஒரு பார்ட்னர் இருக்கணும். அது கண்டிப்பா வேணும். ஆனா அது லீகலா கணவர் மாதிரியான ஒரு விஷயமாக இருக்க கூடாது. அது கண்டிப்பா இல்லை.

அது கல்யாணத்துக்கு அப்புறம் லைப் ஒரு அமைதியானதா பலபேருக்கு இல்லை. இது மனைவிக்கு மட்டுமல்ல, கணவர் சைடு இருந்தும் எனக்கு அமைதியான வாழ்க்கை இல்லை அப்படின்னுதான் நினைக்கறாங்க.

அதனால் இரண்டு பேருக்குமே ஒரு நிம்மதியான, சந்தோஷமான வாழ்க்கைக்கு வழிகள் இல்லாமல் போகுது. அதனால் தனித்தனியான வழிகளில் நடப்பது நல்லது. இது டக்கு டக்குன்னு முடிவு பண்ற விஷயத்தை பத்தி சொல்லல. என்னால முடியல முடியல அப்படீங்கற முடிவுக்கு வர்ற நிலைமைதான் ஏற்படுது.

அந்த நேரத்துல லீகல் பார்மாலிட்டீஸ், ஆறு மாதம் கவுன்சிலிங் இப்படி பல விஷயங்கள் இருக்குது. இதை எல்லாம் யோசித்து பார்த்துதான் என் லைப்புல இது வேண்டாம் அப்படீங்கற ஒரு முடிவுக்கு நான் வந்திருக்கிறேன்.

அதனால் எனக்கு திருமணமே வேண்டாம் அப்படீங்கிற ஒரு முடிவுக்கு நான் வந்து விட்டேன் என்று அந்த நேர்காணலில் ஐஸ்வர்யா லட்சுமி கூறியிருக்கிறார்.

அதனால் எனக்கு திருமணம் குறித்த ஐடியா இல்லவே இல்ல.. திருமணம் குறித்த கேள்விக்கு குண்டை தூக்கி போட்டு ஐஸ்வர்யா லட்சுமி பதிலால் ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES