லியோ படத்தின் வசூல் விவரம்.. உலகளவில் 600 கோடியை தொடுமா...
தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் நாள் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை வெளிவந்தன. ஆனால், அது படத்தின் வசூலை பெரிதளவில் பாதிக்கவில்லை.
இப்படம் வெளிவந்து 22 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் வசூலில் புதுப்புது சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த திரைப்படம் என்று கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாகவும் லியோ இருக்கிறது.
இந்நிலையில் லியோ வெளிவந்து 22 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 580 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரூ. 600 கோடியை தொடும் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என கூறப்படுகிறது.
இந்த வாரம் தீபாவளி விருந்தாக ஜப்பான், ஜிகர்தண்டா 2 என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளிவருவத்தினால் கண்டிப்பாக லியோ ரூ. 600 கோடி வசூல் சாதனையை தொடாது என பேசப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறதுஇ என்று.