பிறப்பிலேயே கிருஷ்ணன்.. சிறுவயது கனவு.. வியாதியால் படும் கஷ்டம்.. Sourabh Raj Jain உண்மை கதை..
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களில் நடிக்கக்கூடிய அவர்களுக்கு தற்போது பெயரும் புகழும் கிடைத்துள்ளது. அந்த வகையில் மகாபாரத தொடரில் கிருஷ்ணராக நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர் சௌரப் ராஜ் ஜெயின்.
மகாபாரதத்தை தவிர இவர் கார்த்திக்கே மாளவியா நடித்த சந்திரகுப்த மவுரியா என்ற தொடரில் தானந்த் என்ற கேரக்டரை சிறப்பாக செய்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் இவரை பாராட்டி இருக்கிறார்கள்.
இவர் தனது 19 ஆவது வயதில் 2004 ஆம் ஆண்டு வெளி வந்த ரீமிக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகுக்கு என்ட்ரி கொடுத்தார். மேலும் இவர் மீட் மிலா டி ரப்பாவில் பணியாற்றி இருக்கிறார்.
பிறப்பால் இவர் ஒரு ஜெயின சமூகத்தை சேர்ந்தவர். எனினும் பௌத்த சமயத்தின் மீது நம்பிக்கை கொண்டு அதை பின்பற்றி வருகிறார். மேலும் தெலுங்கு படமான ஓம் நமோ வெங்கடேசாய என்ற திரைப்படத்தில் வெங்கடேஸ்வரராக நடித்து தெலுங்கு மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் இவர் முகம் பார்ப்பதற்கு கடவுளைப் போல தேஜஸ் ஆக இருப்பதின் காரணத்தால் பல புராணக் கதைகளில் அதிக அளவு நடித்திருக்கிறார். மேலும் இவர் முகத்தில் தவழும் சிரிப்பினை எவராலும் மறக்க முடியாது. இந்த சிரிப்பு மகாபாரத தொடரில் இவருக்கு ஒரு பிளஸ் ஆக அமைந்தது.
கல்விக்கு முக்கியம் தந்த இவர் எம்பிஏ பட்டதாரி ஆக திகழ்கிறார். இவர் எப்படி மகாபாரத தொடரில் கிருஷ்ணனாக அமைதியாக நடித்திருந்தாரோ அது போலவே இயல்பு வாழ்க்கையிலும் மிகவும் அமைதியான பேர் வழியாக திகழ்ந்தவர்.
2010 ஆம் ஆண்டு டான்ஸ் ஸ்கூலில் சந்தித்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவர் காதல் திருமணத்தை செய்து கொண்டு அவர்களது வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதனை அடுத்து பல தொடர்களில் கடவுள்களின் வேடங்களை ஏற்று நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வேடங்களை ஏற்று பக்குவமாக நடித்திருக்கிறார்.
எனினும் கண்ணனாக நடிக்கும் போது அவரும் சற்று பயம் இருந்ததாகவும் ஒவ்வொரு நாளும் பயந்தபடி தான் ஷூட்டிங்குக்கு செல்வேன் என்ற கருத்தையும் அவர் கூறியிருப்பது ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவருக்கு சிறந்த நண்பர்களாக மகாபாரத தொடரில் நடித்த அர்ஜுனன் மற்றும் திரௌபதியாக நடித்த பூஜா சர்மா இருப்பதாக கூறியிருப்பது அவர்களின் நட்பின் ஆழத்தை அழகாக காட்டியுள்ளது.
மேலும் இவர் கிளஸ்டோபோபியா என்ற அரிய வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த வியாதி இருப்பவர்கள் நெருக்கமான இடத்தில் இருக்க மாட்டார்கள். மேலும் அவர்களால் இருக்க அந்த இடத்தில் முடியாது. எப்படி இருந்தார்கள் என்றால் அவர்களுக்குள் பய உணர்வு ஏற்பட்டு விடும்.
அது போன்ற சூழ்நிலைகளை இவர் தவிர்த்து வருவது இயல்பான ஒன்றாகி விட்டது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பிறப்பிலேயே கிருஷ்ணன் இந்த மாதிரி வியாதியால் கஷ்டமா.. என்று அவரது உண்மை கதையை படித்து தங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.