விவாகரத்தாகி 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த நட்சத்திர ஜோடி!
தமிழ் திரை உலகின் நட்சத்திர ஜோடி விவாகரத்து பெற்று 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து ஒருவருக்கொருவர் திருமண நாள் வாழ்த்துக்களைக் கூறி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் நடிகர் ரஞ்சித் மற்றும் நடிகை பிரியாமணி ஒன்று என்பது தெரிந்ததே. இருவரும் ’நேசம் புதுசு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தபோது காதலித்து அதன்பின் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்
இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து சட்டரீதியாக விவாகரத்து பெற்றனர். தற்போது இரண்டு குழந்தைகளும் பிரியா ராமன் உடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் தற்போது ’செம்பருத்தி’ உள்பட ஒரு சில சீரியல்களில் பிரியா ராமன் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண நாள் குறித்து ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் ’என் அன்பு தங்கங்களே நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். எங்கள் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாகிறது. நன்றியும் மகிழ்ச்சியும் தங்கங்களே’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் பிரியாராமன் உடன் இணைந்துள்ள புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.