தமிழ் சீரியலில்.. இயக்குனர்களுக்கு இதை செய்தால் தான் வாய்ப்பு.. ஆனால்,.. ரகசியம் உடைத்த சீரியல் நடிகை பிரவீனா..!

தமிழ் சீரியலில்.. இயக்குனர்களுக்கு இதை செய்தால் தான் வாய்ப்பு.. ஆனால்,.. ரகசியம் உடைத்த சீரியல் நடிகை பிரவீனா..!

அழகான ஆண்ட்டிகள் என்றாலே, சினிமா நடிக்க விரைவில் வாய்ப்பு அமைகிறது. முன்னாள் கதாநாயகிகள் பலரும் இப்போது சினிமாவில், டிவிகளில் அத்தை கேரக்டர்களில்தான் நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில் ராதிகா, அம்பிகா, சத்யப்பிரியா, ஸ்ரீ ரஞ்சனி, நளினி, லதா போன்ற பலரை காண முடிகிறது.

ஆனால் இவர்களில் சிலர், சீரியலில் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் அத்தை வயது தாண்டிய பாட்டிகளாக மாறிவிட்டனர்.

மலையாளத்தில் நிறைய சீரியல்களில் நடித்தவர் பிரவீனா. தமிழில் ராஜா ராணி சீரியலில் ஆல்யா மானசாவுக்கு மாமியாராக நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்.

சன்டிவியில் பிரியமானவள், மகராசி போன்ற சீரியல்களில் நடித்து தமிழக சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமடைந்து இருக்கிறார்.

பிரவீனா, சீரியல் நடிகை மட்டுமல்ல மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்தவர். தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

டெடி, பெங்களூரு நாட்கள், வெற்றிவேல், தீரன் அதிகாரம் 1, சாமி 2, கோமாளி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் அம்மா வேஷம்தான்.

கேரளாவை சேர்ந்த பிரவீனா, சிறந்த நடிகை மட்டுமல்ல. சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார். பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்தவர். அதற்கான விருதுகளை வென்றனர்.

படங்களில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காகவும் மலையாளத்தில் பல விருதுகளை பிரவீனா பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன், வாலிபர் ஒருவர் பிரவீனா மற்றும் அவரது மகள் புகைப்படங்களை, மார்பிங் செய்து ஆபாச புகைப்படங்களாக இணையத்தில் பரவ விட்டார்.

இதையடுத்து பிரவீனா, கேரள சைபர் கிரைம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநெல்வேலியை சேர்ந்த ஒரு வாலிபரை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில், நடிகை பிரவீனா கூறியதாவது, நான் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில், பல சீரியல்களில் நடித்திருக்கிறேன்.

அந்த அனுபவத்தில் தமிழ், தெலுங்கு சீரியலில் நான் நடித்த போது, வித்தியாசமாக பார்த்த விஷயம் என்னவென்றால், ஓவர் ஆக்டிங் செய்வது பல சீரியல்களிலும் இது இருக்கிறது.

மலையாளம் சீரியல்களை பொறுத்தவரை அந்த கதை எப்படி நடக்கிறது, அதற்கு நிஜத்தில் எப்படி ரியாக்ட் செய்வார்களோ அந்த அளவுக்கு ரியாக்ட் செய்தால் போதும். ஓவர் ஆக்டிங் செய்ய தேவையே இல்லை.

ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் ஒரு அதிர்ச்சியான விஷயம் என்றால், என்ன கத்தியபடி ஷாக் ஆக வேண்டும்.. எல்லா விஷயத்துக்குமே தங்களுடைய நடிப்பை ஓவராக கொடுக்க வேண்டும்..

ஓவர் ஆக்டிங் என்பது இங்கு அத்தியாவசியமாக இருக்கிறது. அதைத்தான் இயக்குனர்கள் எதிர்பார்கிறார்கள்.

எனக்கு இது கடினமாக இருந்தாலும் கூட இதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்தாலும் கூட இயக்குனர் சொல்வதை செய்ய வேண்டும் என்பதால், நான் அப்படி நடித்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார் நடிகை பிரவீனா.

பல சீரியல்களில் நடித்த என்ற அனுபவத்தில், தமிழ் சீரியலில்.. இயக்குனர்களுக்கு ஓவர் ஆக்டிங் செய்தால் தான் வாய்ப்பு.

ஆனால், அப்படி நடிப்பது சிரமமாக உள்ளது என்று ரகசியம் உடைத்திருக்கிறார் சீரியல் நடிகை பிரவீனா.

LATEST News

Trending News

HOT GALLERIES