22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரசாந்த் உடன் லைலா: வைரல் வீடியோ

22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரசாந்த் உடன் லைலா: வைரல் வீடியோ

22 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பிரசாந்த் உடன் நடித்த வீடியோவை நடிகை லைலா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பிரசாந்த் நடித்துவரும் திரைப்படம் ’அந்தகன்’. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது .

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க சமீபத்தில் நடிகை லைலா ஒப்பந்தமானார். இவர் கடந்த 2000ம் ஆண்டு வெளியான ’பார்த்தேன் ரசித்தேன்’ என்ற திரைப்படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் அதன் பின்னர் 22 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் பிரசாந்துடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரசாந்துடன் இணைந்து நடித்த ஒரு காட்சியின் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட லைலா, அதில் ‘பார்த்தேன் ரசித்தேன்' படத்தின் பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது .

பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கலைப்புலி தாணு இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட உள்ளார் என்பது

குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES