தன்னை வேண்டாம் என்று கூறிய ஹீரோ.. காத்திருந்து பழி தீர்த்த நயன்தாரா..! அடேங்கப்பா..!

தன்னை வேண்டாம் என்று கூறிய ஹீரோ.. காத்திருந்து பழி தீர்த்த நயன்தாரா..! அடேங்கப்பா..!

நடிகை நயன்தாரா, ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் ஹரி இயக்கத்தில், இந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படம் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்த தமிழில் பல படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்தது.

ரஜினிகாந்த், விஜய், அஜீத், தனுஷ், சியான் விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி என தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பிறமொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் நயன்தாரா நடித்தார்.

மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, பாலய்யா, ஷாருக்கான் என ஸ்டார் நடிகர்களுடன் நடித்தவர் நயன்தாரா.

சில முன்னணி ஹீரோக்கள், நயன்தாராவை இந்த படத்தில் எனக்கு ஜோடியாக போடுங்கள் என வெளிப்படையாகவே தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் கேட்டுள்ளனர்.

அந்தளவுக்கு முக்கிய இடத்தில் இருந்த நயன்தாரா, இப்போதும் லேடீ சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இதுவரை மொத்தம் 75 படங்களில் நடித்திருக்கிறார்.

இப்போது நயன்தாரா, மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பழைய சம்பவம் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதாவது பல ஆண்டுகளுக்கு முன், நயன்தாரா ஒரு ஸ்டைலிஷ் ஆன ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

ஆனால் அந்த படத்தில் அவர் அந்த ஹீரோவுடன் நடிக்க முடியவில்லை. அதன்பிறகு அந்த ஹீரோ நடிகர், நயன்தாரா என்னுடன் இனி நடிக்கவே வேண்டாம்,

அவர் எனக்கு ஜோடியாக நடிக்க வைப்பதாக இருந்தால், அந்த படத்தில் நடிக்காமல் வெளியேறி விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த நாயகன் அல்லு அர்ஜூன்தான். இதுகுறித்து கேள்விப்பட்ட நயன்தாரா பழிவாங்க சரியான தருணம் பார்த்து காத்திருந்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாராவுக்கு, சைமா சார்பில் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சைமா விருது வழங்கும் விழாவில் அந்த விருதை பெறுவதற்காக நயன்தாரா மேடை ஏறினார். அப்போது அந்த விருதை நயன்தாராவுக்கு வழங்க, நடிகர் அல்லு அர்ஜூனாவை அழைத்து, அவரும் ஏற்கனவே மேடையில் நின்றிருந்தார்.

அப்போது மைக்கில் பேசிய நயன்தாரா, இந்த படத்தில் நான் சிறந்த நடிகை விருது பெற காரணம், டைரக்டர் விக்னேஷ் சிவன்தான். எனவே அவரது கையால் இந்த விருதை பெற விரும்புகிறேன், என்று கூறி அல்லு அர்ஜூனாவை புறக்கணித்தார்.

அதன்பின், மேடையேறிய விக்னேஷ் சிவன், அந்த விருதை நயன்தாராவுக்கு வழங்கினார்.

தன்னை வேண்டாம் என்று கூறிய ஹீரோ அல்லு அர்ஜூனை பல ஆண்டுகள் காத்திருந்து பழி தீர்த்த நயன்தாரா குறித்த இந்த பழைய தகவல் இப்போது வைரலாகி வருகிறது.

இதையறிந்த சினிமா ரசிகர்கள் அடேங்கப்பா..! நயன்தாரா பயங்கரமான ஆளுப்பா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

LATEST News

Trending News