என்னை மன்னிச்சுடுங்க டாடி.. காதல் கணவரை பிரிந்த ராஜ்கிரண் மகள் பிரியா..!

என்னை மன்னிச்சுடுங்க டாடி.. காதல் கணவரை பிரிந்த ராஜ்கிரண் மகள் பிரியா..!

நடிகர் ராஜ்கிரண், தமிழ் சினிமாவில் முதலில் தயாரிப்பாளராக இருந்தவர். அதற்கு பின் ஒரு கட்டத்தில் நடிகராக மாறினார். என் ராசாவின் மனசிலே என்ற அவரது முதல் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தில், மாயாண்டி என்ற கேரக்டரில் ராஜ்கிரண் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ராஜ்கிரணுக்கு அமைந்தது.

Raj Kiran

தொடர்ந்து அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான், பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, ப. பாண்டி. முனி, சண்டக்கோழி, கொம்பன் என பல படங்களில் ராஜ்கிரண் நடித்திருக்கிறார்.

முதலில் ஹீரோவாக நடித்தவர் பிறகு, ஹீரோ, ஹீரோயின்களுக்கு தந்தையாக நடிக்க ஆரம்பித்தார். ஒரு கோடி சம்பளம் கொடுத்தும் விளம்பர படங்களில் நடித்து மக்களை ஏமாற்ற மாட்டேன் என்று சொன்னவர் ராஜ்கிரண்.

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா. கடந்த 2022ம் ஆண்டில் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட நடிகர் ராஜ்கிரண் அவர்களின் மகள் பிரியா சக நடிகர் முனீஸ்ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இருவருக்குள்ளும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய காதலனையை பிரிந்த ராஜ்கிரண் அவர்களின் மகள் பிரியா மன்னிச்சிடுங்க டாடி என்று தன்னுடைய முடிவு குறித்து வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், உங்களை மீறி நான் இந்த திருமணத்தை செய்துக்கொண்டேன். இப்போது நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம்.
பிரிந்து சில மாதங்கள் ஆகிறது.

எங்களுக்கு நடந்தது சட்டப்படியான திருமணமும் அல்ல. அதையும் நான் டிக்ளேர் செய்கிறேன்.

அதுமட்டுமல்ல, இந்த கல்யாணத்துக்கு அப்புறம் உங்களை எல்லாம் நிறைய தடவை நான் காயப்படுத்திட்டேன். ஆனால் அப்படி காயப்படுத்திய போதும், எனக்கு பிரச்னை என்று வந்த போது என்னை காப்பாற்றுனீர்கள்.

இது எதிபார்க்காத கருணை. எத்தனை முறை உங்களிடம் மன்னிப்பு கேட்டாலும் பத்தாது. என்னை மன்னிச்சிடுங்க டாடி என்று அந்த வீடியோவில் உருக்கமாக பிரியா பேசியிருக்கிறார்.

ஏற்கனவே பிரியாவின் திருமணத்தின்போது ராஜ்கிரண் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதை எதிர்ப்புகளை மீறி காதலன் முனீஸ்ராஜை திருமணம் செய்தார் பிரியா என்பது குறிப்பிடத்தக்கது.

மிக விரைவில் பிரிந்த இவர்கள் விவாகரத்து செய்யும் மனநிலைக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

LATEST News

Trending News