பவதாரிணி விஷயம் குறித்து வெளியே தெரியாமல் இருந்தது இதனால் தான்- ஓபனாக கூறிய நடிகை
தமிழ் சினிமா மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் வந்த செய்தி இளையராஜாவின் மகன் பவதாரணி உயிரிழப்பு.
பல வருடங்களாக வயிறு வலியால் சிகிச்சை பெற்றுவந்தவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே புற்றுநோய் இருப்பதை அறிந்துள்ளார். அதற்குள் புற்றுநோய் 4வது ஸ்டேஜை எட்டியிருக்க இலங்கைக்கு சிகிச்சை பெற சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு முழு சிகிச்சை தொடங்குவதற்கு முன்பே அவரது உயிர் பிரிந்துள்ளது. சிகிச்சைக்கு செல்வதற்கு முன் அவர் தனது உறவினர்கள், நண்பர்கள் என சிலரை சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கூட வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.
பவதாரிணி விஷயம் குறித்து வெளியே தெரியாதது குறித்து குட்டி பத்மினி பேசும்போது, இந்த கஷ்டமான விஷயத்தை பற்றி வெளியே தெரிந்தால் ஒருசிலர் ஐயோ இப்படி ஆகிவிட்டது என்று பரிதாபப்படுவார்கள், ஆனால் பலர் இது இவர்களுக்கு தேவை தான், இப்படித்தான் ஆகும் என்றெல்லாம் வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் பேசுவார்கள்.
அந்த மாதிரி எதற்கு எல்லாம் பேச வேண்டும் என்றே இந்த விஷயத்தை வெளியே அவர்கள் கூறவில்லை.
ஆனால் பவதாரிணியின் விஷயம் இளையராஜாவுக்கு கூட தெரியுமா என்ன என்பது உறுதியாக தெரியவில்லை என்று குட்டி பத்மினி பேசியிருக்கிறார்.
இதில் ஒரேஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் அவரது கணவர் கடைசி காலத்தில் உடன் இருந்துள்ளார், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருந்தார்கள் என கூறப்பட்டதாக நடிகை கூறியுள்ளார்.