பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தது.. அடுத்தது குக் வித் கோமாளி சீசன் 5 தான்.. ஆனால் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தது.. அடுத்தது குக் வித் கோமாளி சீசன் 5 தான்.. ஆனால் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!

விஜய் டிவியில் மக்களால் அதிகம் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. பிக் பாஸ் நிகழ்ச்சியை எந்த அளவிற்கு ரசிக்கிறார்களோ, அதை விட அதிகமாகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன் துவங்கியது. முதல் சீசன் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது சீசன் ப்ளாக் பஸ்டர் ஹிட் என சொல்லலாம்.

இந்த வெற்றியை தொடர்ந்து சீசன் 3 மற்றும் சீசன் 4 கடந்த ஆண்டு நடந்து முடிந்தது. இதனால் குக் வித் கோமாளி சீசன் 5 எப்போது துவங்கும் என்று ஆவலுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவுபெற்ற கையோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சி துவங்குவது தான் எப்போதுமே வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி தான் தற்போது வெளியாகியுள்ளது. 

குக் வித் கோமாளி சீசன் 5 கிடையாதாம். ஆம் இந்த ஆண்டு துவங்கவிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் துவங்காது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதை குக் வித் கோமாளிநிகழ்ச்சி ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தது.. அடுத்தது குக் வித் கோமாளி சீசன் 5 தான்.. ஆனால் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல் | Cooku With Comali Season 5 Will Not Be Telecast

ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 4 முடியும் போது, குக் வித் கோமாளி சீசன் 5 இல்லை என்பது போல் தகவல் வெளிவந்தது. அதேபோல் தற்போது வெளிவந்துள்ள செய்திகளும் அந்த தகவலை உறுதி செய்கிறது. 

ஆனால் இதுகுறித்து விஜய் டிவி தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. ஆகையால் குக் வித் கோமாளி சீசன் 5 ஆரம்பிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

LATEST News

Trending News

HOT GALLERIES