வாழ்க்கையின் முடிவு.. கதறி அழுத வீடியோ... பிக்பாஸ் தனலட்சுமிக்கா இந்த நிலைமை.

வாழ்க்கையின் முடிவு.. கதறி அழுத வீடியோ... பிக்பாஸ் தனலட்சுமிக்கா இந்த நிலைமை.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழில் இந்த ஷோ ஹிட் அடிக்குமா என்ற தயக்கத்துடனேயேதான் முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டது. கமல் ஹாசன் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். 

யாரும் எதிர்பார்க்காதபடி முதல் சீசன் மெகா ஹிட்டடித்தது. அதிலிருந்து பிக் பாஸ் ஷோ பிக்கப் ஆகிவிட்டது. தொடர்ந்து ஆறு சீசன்கள் நடந்து முடிந்து தற்போது ஏழாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. 

இதுவரை கிட்டத்தட்ட 80 நாட்கள் நிகழ்ச்சி நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம்போல் இந்த சீசனை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினாலும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

மேலும் ஒருதரப்புக்கு மட்டுமே அவர் சப்போர்ட் செய்கிறார் என்ற குற்றச்சாட்டையும் ரசிகர்கள் ஓபனாக சமூக வலைதளங்களில் வைத்துவருகின்றனர்.

இந்த சீசனில் நடக்கும் பஞ்சாயத்தைவிடவும் ஆறாவது சீசனில் பஞ்சாயத்து களைகட்டியது. அதில் குறிப்பிடத்தகுந்தவர் தனலட்சுமி. டிக் டாக் வீடியோ மூலம் சமூக வலைதளத்தில் பிரபலம் ஆனவர்தான் தனலட்சுமி. 

அந்த பிரபல்யம் அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்தது. மொத்தம் 77 நாட்கள் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டுக்குள் இருந்தவரை அவர் யாருக்கும் அஞ்சாமல் போல்டாகவே இருந்தார். ஜிபி முத்துவுடன் போட்ட சண்டை, அசீமுடன் போட்ட சண்டை அவ்வப்போது டாக் ஆஃப் தி டவுனாகவும் இருந்தார். 

அதேசமயம் அவரது ஓவர் ஆட்டிட்யூட் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி வெளியில் இருக்கும் ரசிகர்களையும் எரிச்சல் அடைய செய்தது என்பதுதான் உண்மை. பொதுவாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்துவிட்டால் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கும் அதன் மூலம் மேலும் பேரும் புகழும் கிடைக்கும் என்பதுதான் பொதுவான புத்தி. 

ஆனால் 6 சீசன்கள்வரை பெரிதாக யாருக்கும் அப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுதான் கள யதார்த்தம். ஆரவ் மட்டுமே ஓரளவு சினிமாவில் ஷைன் ஆகிக்கொண்டிருக்கிறார். தற்போதுகூட அவர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார்.

எப்படியும் நமக்கும் சினிமாவில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும் என்றுதான் தனலட்சுமி நினைத்திருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எந்த வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. 

எனவே பிக்பாஸிலிருந்து வெளியே வந்ததும் அவர் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. இந்த சூழலில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருக்கும் வீடியோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது அனிருத்தின் இசை பின்னணியில் ஒலிக்க; தனலட்சுமியோ கதறி அழுதபடி இருக்கிறார். மேலும் அதற்கு கேப்ஷனாக வாழ்க்கையின் முடிவு மரணம். ஓம் நமசிவாய என்று எழுதியிருந்தார். ஆனால் சில மணி நேரத்தில் வாழ்க்கையின் முடிவு மரணம் என்பதை எடுத்துவிட்டார். 

இருந்தாலும் அதற்குள் அந்த கேப்ஷனை நெட்டிசன்கள் பார்த்து அவருக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். சிறு வயதிலேயே மரணத்தை பற்றி பேசும் அளவுக்கு அவருக்கு என்ன விரக்தியும், பிரச்னையும் வந்துவிட்டது என்பதுதான் நெட்டிசன்களின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

LATEST News

Trending News