விவாகரத்தான நடிகருடன் இரண்டாம் திருமணம்!! தொகுப்பாளினி டிடி எடுத்த அதிரடி முடிவு..
விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவரை டிடி என ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் தற்போது உடல்நிலை காரணமாக விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை. தொகுப்பாளினி டிடிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் முடிந்தது. ஆனால் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
விவாகரத்துக்கு பின் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் டிடி, தன்னால் 15 நிமிடத்திற்கு மேல் நிற்க முடியாத அளவிற்கு காலில் வலி இருக்கிறது என்று கூறியிருந்தார். அதனால் ஒருசில படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் உட்கார்ந்த படி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் டிடி.
சில ஆண்டுகளாகவே டிடி-க்கு விரைவில் இரண்டாம் திருமணம் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில், டிடி-யில் இன்ஸ்டா பதிவு ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள எனக்கு ஓகே, அவருக்கு ஓகேவா என்று தெரியவில்லை என்ற ஒரு பதிவினை இன்ஸ்டாகிராம் பதிவில் போட்டிருந்தார்.
இந்த செய்தி இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில் பல முறை இதற்கான வதந்தி செய்திகளுக்கு டிடி மற்றும் அவரது சகோதரி பிரியதர்ஷினியும் விளக்கம் கொடுத்ததோடு அதையெல்லாம் பார்த்து சிரிப்பாக வரும் என்று கூறியிருந்தனர். அந்த மாப்பிள்ளை யாருப்பா? அவரை பார்க்க வேண்டும் என்று கூட டிடியின் சகோதரி கலாய்த்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.