அந்த நடிகரைத்தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்.. வெளிப்படையாக பேசிய அனிமல் பட நடிகை..
பாலிவுட் சினிமாவில் இளம் பருத்திலேயே சென்சேஷ்னல் நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிப்தி டிம்ரி.
மாம் என்ற படத்தில் நடித்து புல்புல் என்ற வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாகிய அனிமல் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வந்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை நடிகை த்ரிப்தி டிம்ரிக்கு கொடுத்தது.
தற்போது ராஜ்குமார் ராவுடன் இணைந்து வேறொரு முக்கிய படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது ஷாருக்கான் தான்.
எனக்கு 5 முதல் 6 வயது இருக்கும் போது அவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று என் குடும்பத்த்ல் அனைவரிடமும் சொன்னதாக நடிகை த்ரிப்தி டிம்ரி பகிர்ந்துள்ளார்.