விஷ்ணு அக்காவை பார்த்து மிரண்டு போன மாயா - நிக்ஷன்.. மனமுடைந்து ஓரமாக ஒதுங்கிய பூர்ணிமா - ப்ரோமோ.
விஷ்ணுவின் அக்கா நடந்து கொண்டதை பார்த்த பூர்ணிமா மனமுடைந்து போயுள்ளார்.
முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 7 தமிழ் நிகழ்ச்சியின் முக்கியமான நிகழ்வான பிரீஷ் டாஸ்க் நேற்றைய தினம் துவங்கியுள்ளது.
முதல் நாளான நேற்று வலிமை பட பாடல் ஒலிக்கப்பட்டு பூர்ணிமாவின் அம்மா வரவழைக்கப்பட்டார்.
பின்னர் விஜய், விக்ரம், அர்ச்சனா இப்படி போட்டியாளர்களின் நெருங்கிய சொந்தங்கள் வீட்டினுள் அடுத்தடுத்து வந்தனர்.
போட்டியாளர்களுடன் கலாய்த்து விளையாட்டு விட்டு அறிவுரைகளையும் வழங்கி சென்றனர்.
இந்த நிலையில் விஷ்ணுவை பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் அக்கா - அம்மா ஆகிய இருவரும் வருகை தந்திருந்தனர்.
வெளியில் இருந்து வருபவர்களின் ரியாக்ஷனை பார்த்து தான் வீட்டிலுள்ளவர்கள் எப்படி வெளியில் நம் பெயர் இருக்கின்றது என்பதனை தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் விஷ்ணுவை காண ஆவலுடன் வந்த அக்கா, பூர்ணிமாவை பார்த்து முறைத்துள்ளார். அவருடன் மாயா, நிக்ஷனை பார்த்தும் முறைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து பூர்ணிமா- விஷ்ணுவின் கண்முன் சென்று கவலையாக அமர்ந்திருக்கின்றார்.
பூர்ணிமாவின் கவலைக்கு என்ன காரணம் என தெரிந்து கொள்ள விஷ்ணு பல முறை கேட்கிறார். ஆனால் பூர்ணிமாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இப்படியாக இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கின்றது.