முதலமைச்சரின் மகனா இருந்தா என்ன.. எனக்கு பயம் கிடையாது..! – பாலியல் தொல்லை குறித்து நடிகை சுஜிதா அதிரடி..!
சீரியல் நடிகை சுஜிதா சமீபத்திய பேட்டி பேசியுள்ள விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை சுஜிதா.
இவர் தூர்தர்ஷன் காலத்திலிருந்து சீரியல்களில் நடித்து வருகிறார். ஒரு பெண்ணின் கதை என்ற சீரியல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது உங்களுக்கு நினைவிருக்கும்.
அந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமானார் நடிகை சுஜிதா. தற்போது வரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கம் சினிமாவிலும் அவ்வப்போது தன்னுடைய பங்களிப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சுஜிதா சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநீதிகள் குறித்து பேசி இருக்கிறார்.
அவர் கூறியதாவது, பெண்கள் என்றாலே பலவீனமானவர்கள் என்ற ஒரு கருத்தை சமுதாயத்தில் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு ஆண் அழுகிறார் என்றால் நீ என்ன பொம்பள மாதிரி அழுதுட்டு இருக்க… என்று கேட்கிறார்கள்.
ஏன் பொம்பள மட்டும் தான் அழவேண்டுமா..? ஆண்கள் அழக்கூடாதா..? அது என்ன பொம்பள மாதிரி அழுதுட்டு இருக்க என்று பெண்களை பலவீனமானவர்கள் என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்வது.
பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஒருவன் உங்களிடம் அத்துமீறுகிறான்.. பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறான்.. உங்களை கெடுத்து விட்டான். என்றால் கூட அதனை வெளிப்படையாக பொது வழியில் சொல்லிப் பழக வேண்டும்.
இவன் என்னை கெடுத்து விட்டான் என்று பொதுவெளியில் வெளிப்படையாக கூறுங்கள். தவறே கிடையாது. அவன் முதலமைச்சர் மகனாக இருந்தாலும் சரி.. எனக்கு பயமில்லை.. பிரதமரின் மகனாக இருந்தாலும் சரி.. எனக்கு பயமில்லை.. எவனாக இருந்தாலும் சரி ஒரு பெண் மீது கை வைத்தால் தண்டனை உண்டு.
நான் இதை செய்தால், அவள் வெளியே சொல்வாள் என்ற பயம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் இப்படியான குற்றங்கள் குறையும் என பேசி இருக்கிறார் நடிகை சுஜிதா. இவருடைய இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி பரவி வருகின்றது.