வன்மத்தை கக்கும் போட்டியாளர்களை வறுத்தெடுத்த கமல்..பரபரப்பான ப்ரோமோ
வன்மத்தை கக்கும் போட்டியாளர்களை சுட்டிக்காட்டி இன்றைய தினம் கமல் பேசியிருந்தார்.
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்தது.
இதனை தொடர்ந்து கடந்த வாரங்களிலிருந்து பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்கள் அதிகமாகி வருகின்றது. இதனால் போட்டியாளர்கள் தங்களை அதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிக்பாஸ் 7 ல் இன்றைய தினம் பரபரப்பான சம்பவங்கள் இருக்கின்றன என தெரியவந்துள்ளது. ஏனெனின் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே கமல் காரசாரமாக பேசியுள்ளார்.
வீட்டிலுள்ள போட்டியாளர்கள் சாப்பிடும் போது கூட சக போட்டியாளர்கள் மீது வன்மத்தை கக்குகிறார்கள் என பேசியுள்ளார்.
மேலும் நேற்றைய தினம் அர்ச்சனா - தினேஷ் - நிக்ஷன் ஆகிய மூவரையும் கிழித்து தொங்க விட்டது போல் இன்றைய தினம் புல்லி கேங்கை என்ன சொல்ல போகிறார் என்பதனை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள்.
அத்துடன் கமல் வந்தவுடன் கருத்து சொல்வது என்ற பெயரில் போட்டியாளர்களை முட்டாள் என மறைமுகமாக தாக்கியுள்ளார்.