ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவிற்கு எதிராக நடக்கும் கொடுமை! அதிர்ச்சி தகவல்

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவிற்கு எதிராக நடக்கும் கொடுமை! அதிர்ச்சி தகவல்

கடந்த வாரம் எப்படி பிக் பாஸ் 8 தமிழில் துவங்கியதோ, அதே போல் ஹிந்தியில் பிக் பாஸ் 18 சீசன் பிரமாண்டமாக துவங்கியது. இதில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஸ்ருதிகா போட்டியாளராக கலந்துகொண்டார்.

இவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிலேயே கலந்துகொள்ளலாமே, ஏன் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், ஹிந்தி பிக் பாஸில் தற்போது பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார் ஸ்ருதிகா.

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவிற்கு எதிராக நடக்கும் கொடுமை! அதிர்ச்சி தகவல் | Shrutika Arjun Bullied In Bigg Boss 18 Hindi

பலரையும் ரசிக்க வைத்து கொண்டு இருக்கிறார். இதனால் ஹிந்தி பிக் பாஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் பிக் பாஸ் விட ஹிந்தி பிக் பாஸ் பார்க்கலாம் போலயே என பலரும் கமன்ட் செய்து வருகிறார்கள்.

ஹிந்தி பிக் பாஸில் இருந்தாலும் அவ்வப்போது ஸ்ருதிகா தன்னை மீறி தமிழில் பேசி விடுகிறார். அதற்கு மன்னிப்பும் கேட்டார். மேலும் அங்குள்ள போட்டியாளர்களுக்கு சிலருக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார். சூப்பர்ஸ்டார் வசனங்களை கூட தமிழில் பேசினார்.

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவிற்கு எதிராக நடக்கும் கொடுமை! அதிர்ச்சி தகவல் | Shrutika Arjun Bullied In Bigg Boss 18 Hindi

இந்த நிலையில் ஸ்ருதிகா தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் அங்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சிலர் அவரை பற்றி தவறாக முதுகுக்கு பின்னால் பேசுகிறார்களாம். ஸ்ருதிகா ஹிந்தியில் தொடர்ந்து பேசினாலும், அவர் பேசும் விதத்தில் தமிழ் ஸ்லாங் வந்துவிடுகிறது.

இதனால் அங்குள்ள சிலர் அதை வைத்து ஸ்ருதிகாவை கிண்டல் செய்து, ஒரு மாதிரி பார்க்கும்போது அது ஸ்ருதிகாவிற்கு வருத்தமாக இருக்கிறது என அவரே கூறியுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES