சித்ரா தற்கொலை வழக்கு!! 4 ஆண்டுகளாக ஆதாரம் கிடைக்கவில்லை!! விடுதலையான ஹேமந்த்துக்கு மீண்டும் சிக்கல்..

சித்ரா தற்கொலை வழக்கு!! 4 ஆண்டுகளாக ஆதாரம் கிடைக்கவில்லை!! விடுதலையான ஹேமந்த்துக்கு மீண்டும் சிக்கல்..

சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை சித்ரா 2020 டிசம்பர் 9 ஆம் தேதி சென்னை நசரத் பேட்டியில் இருக்கும் ஓட்டலில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ரா தற்கொலை வழக்கு!! 4 ஆண்டுகளாக ஆதாரம் கிடைக்கவில்லை!! விடுதலையான ஹேமந்த்துக்கு மீண்டும் சிக்கல்.. | Husband Hemnath In Actress Vj Chitra Suicide Caseஅவரது தற்கொலைக்கு கணவர் ஹேமந்த் நாத் என்பவர் காரணம் என்று கைது செய்யப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளாக சித்ரா தற்கொலை வழக்கு விசாரணையில் இருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடந்துள்ளது.

வழக்கு விசாரனை நிறைவடைந்து சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

சித்ரா தற்கொலை வழக்கு!! 4 ஆண்டுகளாக ஆதாரம் கிடைக்கவில்லை!! விடுதலையான ஹேமந்த்துக்கு மீண்டும் சிக்கல்.. | Husband Hemnath In Actress Vj Chitra Suicide Caseஅதில் போதிய ஆதாரம் இல்லாததால் நடிகை சித்ரா கணவர் ஹேமந்த் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தீர்பை கேட்ட நடிகை சித்ராவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து தீர்ப்பை எதிர்த்து போலிசாரும் சித்ரா குடும்பத்தினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று அக்டோபர் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எம். நிர்மல் குமார் மனு குறித்து ஹேம் நாத் பதிலளிக்குமாறு உத்திரவிட்டு விசாரணை வரும் நவம்பர் 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES