வெறும் 23 வயதில் ரூ.4 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.
ஹிந்தியில் லாக் அப் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆனவர் அஞ்சலி அரோரா. அவருக்கு இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹிந்தி பிக் பாஸ் 17ம் சீசனில் அவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்று இருந்தார்.
அவர் வெளியிடும் மியூசிக் வீடியோகளுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆன்மீகத்திலும் அவர் ஈடுபாடு காட்டிவரும் அவர் செய்யும் விஷயங்களும் அடிக்கடி செய்தியாகின்றது.
4 கோடிக்கு வீடு
வெறும் 22 வயதில் சொந்தமாக கார் வாங்கி பெற்றோருக்கு கொடுத்து இருந்தார். தற்போது 23 வயதில் அவர் சொந்தமாக வீடும் வாங்கிவிட்டார்.
டெல்லியில் அவர் 4 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி இருக்கிறார். அதன் கிரஹபிரவேச வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.