ஓடிடி-யில் வெளியான நயன்தாராவின் நெற்றிக்கண் - ரிலீஸுக்கு முன்பு நடந்த விஷயத்தால் படக்குழு அதிர்ச்சி

ஓடிடி-யில் வெளியான நயன்தாராவின் நெற்றிக்கண் - ரிலீஸுக்கு முன்பு நடந்த விஷயத்தால் படக்குழு அதிர்ச்சி

கொரோனா காரணமாக தற்போது ஓ.டி.டி. தளங்களில் தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களின் படங்கள் வெளியாகி வருகிறது.

அப்படி சமீபத்தில் நயன்தாராவின் நடிப்பில் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் தான், நெற்றிக்கண்.

திரையரங்குகளில் வெளியாகும் படங்களை தான், திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுகிறார்கள் என்றால், தற்போது ஓடிடி-யில் வெளியாகும் படங்களுக்கும் இந்த நிலை வந்துள்ளது.

சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் வெளியான, மிமி எனும் படமும் ஓடிடி ரிலீஸுக்கு முன்பே, திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நயன்தாரா பார்வையற்றவராக நடித்து ஓடிடி தளத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தையும் ரிலீஸுக்கு முன்பு, திருட்டு தனமாக இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இதனால் நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சியாகியுள்ளார்கள் என்று செய்து வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES