ஹீரோவானார் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ்

ஹீரோவானார் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ்

பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த ஐந்து சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி உள்ளார். 

 

இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். ஏற்கனவே பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரீஷ் கல்யாண், ஆரவ், கவின், முகின், ரைசா வில்சன், ரம்யா பாண்டியன் ஆகியோர் கோலிவுட்டில் வெற்றிகரமான நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர்.

 

ரவீந்திரன் சந்திரசேகரன், பாலாஜி முருகதாஸ்

ரவீந்திரன் சந்திரசேகரன், பாலாஜி முருகதாஸ்

 

இந்நிலையில், பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்க உள்ள படத்தை லிப்ரா புரடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிக்க உள்ளார். 

LATEST News

Trending News