கணவர், குழந்தையுடன் இருக்கும் விஜய்யின் 'யூத்' பட நாயகி: வைரல் புகைப்படம்!
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’யூத்’. வின்சென்ட் செல்வா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஜோடியாக சாஹின்கான் என்பவர் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக சாஹின்கான் நடிப்புக்கு நல்ல விமர்சனம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சாஹீன் கான் வேறு தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாஹீன் கான் கடந்த ஏற்கனவே ஃபேர் அண்ட் லவ்லி உள்ளிட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பதும் சங்கர் மகாதேவனின் மியூசிக் வீடியோவில் தோன்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் சாஹின்கான், மும்பையை சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதன் பிறகு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்பதும், இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது திரையுலகில் இருந்து விலகி இருக்கும் சாஹின்கான், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.