விஜய்யுடைய ஃபிட்னஸுக்கு இப்படி நடிக்கலாம்.. மனம் திறந்த நடிகை சமந்தா.
சமந்தா - விஜய் ஜோடி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஜோடி என்பது அனைவரும் அறிந்தது தான்.
முதலில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த கத்தி படத்தில் தான் விஜய், சமந்தா இருவரும் இணைந்து நடிக்க ஆரம்பித்தனர்.
இதன்பின் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த தெறி படத்திலும், மெர்சல் படத்திலும் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இந்த ஜோடியை திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'நடிகர் விஜய்க்கு இருக்கும் ஃபிட்னஸுக்கு அவர் சூப்பர் ஹீரோ கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்கலாம்'.
'அந்த படத்தில் நான் சூப்பர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்' என கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.