"ஜெயிலர்" படத்தை பற்றி அப்டேட் கொடுத்த யோகி பாபு - மகிழ்ச்சியில் ரசிகர்கள்...

"ஜெயிலர்" படத்தை பற்றி அப்டேட் கொடுத்த யோகி பாபு - மகிழ்ச்சியில் ரசிகர்கள்...

ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் "அண்ணாத்த". இந்த படத்தை தொடர்ந்து தற்போது ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் "ஜெயிலர்". இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.

இதில், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், மலையாள நடிகர் மோகன்லால், மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

"ஜெயிலர்" படத்தை பற்றி அப்டேட் கொடுத்த யோகி பாபு - மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Jailer Movie Update

 

இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்திருப்பதாக சொல்ல படுகிறது.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு "ஜெயிலர்" படத்தை பற்றி அப்டேட் ஒன்று கூறியுள்ளார்.

அதில், "ரஜினி சாறுடன் தர்பார் படத்தில் சில காமெடி காட்சிகள் மட்டும் தான் இருந்தது. ஆனால் இந்த "ஜெயிலர்" படம் முழுக்க காமெடியாக இருக்கும். ரஜினி சார் இந்த காமெடி காட்சிகளில் மிக எதார்த்தமாக நடித்துள்ளார். மேலும், ரஜினி சார் காம்பினேஷனில் இது ஒரு வித்தியாசமான படம்" என கூறியுள்ளார்.

"ஜெயிலர்" படத்தை பற்றி அப்டேட் கொடுத்த யோகி பாபு - மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Jailer Movie Update

LATEST News

Trending News

HOT GALLERIES