மகள் இறப்பிற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஆண்டனி.

மகள் இறப்பிற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளர், நடிகர் என தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்தவர் தான் விஜய் ஆண்டனி. இவரது மகள் மீரா சமீபத்தில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விஷயம் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

மகளின் மறைவிற்கு பிறகு மனமுடைந்து காணப்பட்ட விஜய் ஆண்டனி, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள், அவளுடன் நானும் இறந்துவிட்டேன்.

நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன் என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

மகள் இறப்பிற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஆண்டனி | Vijay Antony Will Participate In Shooting Againதற்போது ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள விஜய் ஆண்டனி முடிவு செய்துள்ளாராம்.

இதனையடுத்து புது இயக்குனர் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி பெங்களூருவில் நடக்கும் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகள் இறப்பிற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஆண்டனி | Vijay Antony Will Participate In Shooting Again

LATEST News

Trending News

HOT GALLERIES