காதலராக ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா... 20 ஆண்டுக்கு முன்பு எடுத்த அரிய புகைப்படம்.

காதலராக ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா... 20 ஆண்டுக்கு முன்பு எடுத்த அரிய புகைப்படம்.

நடிகர் சூர்யா 20 ஆண்டுக்கு முன்பு நடித்து வெளியான காக்க காக்க படத்தின் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன் டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வெளியான படம் தான் காக்க காக்க.

இந்த படம் வெளியாகி கடந்த 1ம் தேதியுடன் 20 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இப்படத்தின் இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு இன்றளவும் பெரிதாகவே பேசப்பட்டு வருகின்றது.

குறித்த படத்தில் சூர்யா ஏசிபி என்ற அன்பு செல்வன் கதாப்பாத்திரம் உண்மைக்கு நெருக்கமாக இருப்பதாக அன்றைய காவல்துறை அதிகாரிகளே பாராட்டினர்.

காதலராக ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா... 20 ஆண்டுக்கு முன்பு எடுத்த அரிய புகைப்படம் | Suriya Jyothika 20 Years Back Photos Viralஇந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகளான நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், என்னுடைய எல்லாவற்றையும் கொடுத்த படம்.

அன்புசெல்வன் எப்பொழுதும் என் இதயத்துக்கு நெருக்கமாக இருப்பார். காக்க காக்க படத்தின் இளம் கன்றுகளான தொழில்நுட்ப கலைஞர்கள், இந்தப் படம் தொடர்பாக என்னிடம் முதலில் பேசிய ஜோதிகா, என்னுடைய சக நடிகர்கள் இயக்குநர் கௌதம் மேனன், ஆகியோருக்கு நன்றி.

நிறைய நல்ல நினைவுகள். என்று குறிப்பிட்டுள்ளார்.   

காதலராக ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா... 20 ஆண்டுக்கு முன்பு எடுத்த அரிய புகைப்படம் | Suriya Jyothika 20 Years Back Photos Viral

காதலராக ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா... 20 ஆண்டுக்கு முன்பு எடுத்த அரிய புகைப்படம் | Suriya Jyothika 20 Years Back Photos Viral

LATEST News

Trending News