கடல் அலையுடன் சண்டை… குழந்தையாகவே மாறிவிட்ட ‘லியோ’ பட நடிகை..!

கடல் அலையுடன் சண்டை… குழந்தையாகவே மாறிவிட்ட ‘லியோ’ பட நடிகை..!

தமிழ், மலையாள சினிமாவில் நடித்து இளம் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்துவரும் நடிகை ஒருவர் கடல் அலையுடன் துள்ளிக் குதித்து விளையாடியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.

மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘பிரேமம்’ திரைப்படத்தில் குறைந்த காட்சிகளில் மட்டுமே நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘கவண்’, ‘காதலும் கடந்துபோகும்’ திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். மேலும் ‘பா பாண்டி’, ‘ஜுங்கா’, ‘வானம் கொட்டட்டும்’ போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் லோகேஜ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘லியோ’ திரைப்படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தி நடிகர் சஞ்சய் தத், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் அடுத்து நடிகை த்ரிஷா, பிரியா ஆனந்த், அபிராமி, மேலும் அர்ஜுன் சர்ஜா, மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரியில் காஷ்மீரில் ஆரம்பித்த இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பிரம்மாண்ட அளவில் சென்னையில் நடைபெற்றது. தற்போது இந்தப் படத்தின் இறுதிக்காட்சி விசாகப்பட்டிணத்தில் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் நடிகை மடோனா செபாஸ்டியன் சண்டை காட்சியில் நடிக்க உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

இப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்புக்கு இடையே நடிகை மடோனா செபாஸ்டியன் தற்போது கடல் அலையுடன் கொஞ்சி விளையாடி கொண்டிருக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகி இருக்கிறது. அதில் கடல் அலையுடன் துள்ளி குதித்து விளையாடும் நடிகை மடோனா ஒரு குழந்தையாகவே மாறியிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது மகிழ்ச்சிக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

LATEST News

Trending News