மகனை என்னிடமிருந்து பிரித்தது எங்க அப்பா தான்: விஜயகுமார் மீது குற்றச்சாட்டும் வனிதா!

மகனை என்னிடமிருந்து பிரித்தது எங்க அப்பா தான்: விஜயகுமார் மீது குற்றச்சாட்டும் வனிதா!

என் மகனை என்னிடம் சேரவிடாமல் பிரித்தது என் அப்பா விஜய்குமார் தான் காரணம் என குற்றம் சாட்டி வருகிறார் வனிதா.

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார். முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தவர், திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

வனிதாவின் முதல் திருமண வாழ்க்கை கருத்து முரண்பாடால் பிரிய அடுத்தடுத்து இரண்டு திருமணங்களை செய்துக் கொண்டார். ஆனால் எந்த வாழ்க்கையும் சரியாக அமையாமல் எல்லாமே விவாகரத்தில் தான் முடிந்தது.

பின்னர் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதையடுத்து பிரபலமடைந்த அவர், தொடர்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் 1 இன் வெற்றியாளராகினார். அதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

என் மகனை என்னிடமிருந்து பிரித்தது எங்க அப்பா தான்

இந்நிலையில், மகனிடம் இருந்து தன்னை பிரித்தது தன் அப்பா விஜய்குமார் தான் என பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

என் பெற்றோர் நான் அவர்களின் பிள்ளை என சொல்லுவது சரியோ தப்போ எனக்குத் தெரியாது. என் அம்மா அப்போது உடம்பு சரியில்லாமல் இருந்தார். அம்மாவை நான் எதுவும் சொல்ல மாட்டேன் ஆனால் அப்பா அப்போது குடித்து விட்டுதான் இருந்தார்.

அவர் என் மகனை பகடைகாயாக மாற்றிக் கொண்டார். அவர்தான் என் மகனையும் என்னிடம் இருந்து பிரித்தார் அவர் இதை ஏன், எதற்காக செய்தார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது ஆனால் அவர் தான் இது எல்லாவற்றிற்கும் காரணம் என எனக்குத் தெரியும்.

என் மகனை என்னிடமிருந்து பிரித்தது எங்க அப்பா தான்

மேலும், அம்மா இறக்கும் வரைக்கும் நாங்கள் சந்தோசமாகத் தான் இருந்தோம் அப்பாவும் பாசமாகத் தான் இருந்தார் அம்மா இருக்கும் வரைக்கும் அம்மா இறந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது.

நான் சமீபத்தில் கூட அவருக்கு தொலைப்பேசி எடுத்து பேசினேன் அப்போது அவர் என்னிடம் கோபம் இல்லாமல் பேசினார். பிறகு அருண்விஜய் அண்ணாவையும் சந்தித்து பேசினேன் அவரின் முகத்திற்கு நேராக நின்று நலம் விசாரித்தேன் அவரும் என்னிடம் நன்றாக பேசினார்.

எல்லாவற்றையும் பேசி சண்டையை முடித்துக் கொள்வேன் என சொன்னேன் அதற்கு அவர் பயந்துக் கொண்டு இங்கு வேண்டாம் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.      

LATEST News

Trending News

HOT GALLERIES