ஹெல்மெட் அணிந்து சென்றும் பிரபல சீரியல் நடிகருக்கு கண்ணில் பட்ட காயம்...

ஹெல்மெட் அணிந்து சென்றும் பிரபல சீரியல் நடிகருக்கு கண்ணில் பட்ட காயம்...

விஜய் தொலைக்காட்சியில் அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு பிரபலமானவர் சக்திவேல்.

விஜய் டிவியில் சில சீரியல்களிலும் நடித்துள்ள இவர் ஏமாளி யூடியூட் சேனலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இவர் அண்மையில் விருகம்பாக்கம் ஐநாக்ஸ் தியேட்டர் அருகே டூவீலரில் சென்று கொண்டிருக்க சாலைகள் கிடந்த கற்கள் லாரி டயரில் சிக்கி பின்னாடி சென்றுக் கொண்டிருந்த அவரது கண்ணில் பட அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார்.

சுய நினைவையே இழந்து மயங்கிய சக்திவேலை அங்கிருந்த பொதுமக்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தற்போது அவரது ஒரு கண்ணில் கல் பட்ட நிலையில் கட்டுப் போட்டிருக்கும் புகைப்படத்தை அவரே வெளியிட்டுள்ளார். சக்திவேலுக்கு இந்த சம்பவம் கடந்த மே 24ம் தேதி நடந்துள்ளதாம். 

ஹெல்மெட் அணிந்து சென்றும் பிரபல சீரியல் நடிகருக்கு கண்ணில் பட்ட காயம்- அவரே வெளியிட்ட போட்டோ | Serial Actor Sakthivel Eyes Injured

LATEST News

Trending News

HOT GALLERIES