போலீஸ் அதிகாரி கார் மீது தாக்குதல்: விஷால் பட நடிகை மீது வழக்கு...

போலீஸ் அதிகாரி கார் மீது தாக்குதல்: விஷால் பட நடிகை மீது வழக்கு...

விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து இருந்தவர் டிம்பிள் ஹயாதி. அவர் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.

அவர் தற்போது ஹைதராபாத்தில் ஒரு அபார்ட்மென்டில் கணவருடன் வசித்து வருகிறார். அதே அபார்ட்மெண்டில் தான் மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டே என்பவரும் வசித்து வருகிறார்.

போலீஸ் அதிகாரி கார் மீது தாக்குதல்: விஷால் பட நடிகை மீது வழக்கு | Dimple Hayathi Damaged Police Officer Car

டிம்பில் ஹயாதிக்கும் காவல் ஆணையர் ராகுலுக்கும் பார்க்கிங் இடம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்திருக்கிறது.

ஒரு நாள் டிம்பிள் ஹயாதி அவர் காரை நிறுத்த வந்த போது அங்கு ராகுலின் கார் இருப்பதை பார்த்து கடும் கோபமாகி இருக்கிறார். ஹயாதியின் கணவர் காரை வைத்து அந்த காரை இடித்து இருக்கிறார். மேலும் நடிகையும் காலால் காரை உதைத்து கத்தி இருக்கிறார்.

இது பற்றி போலீஸ் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். விசாரணைக்காக டிம்பில் ஹயாத்தி அவரது வழக்கறிஞர் உடன் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறார். 

LATEST News

Trending News

HOT GALLERIES