என்னை விட ராஜ வெற்றி பிரபு வயது குறைவா? உண்மையான வயதை சொன்ன தீபிகா
கனா காணும் காலங்கள் இரண்டாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் நடித்து வரும் ராஜா வெற்றி பிரபு மற்றும் தீபிகா ஆகியோர் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
பிரம்மாண்டமாக நடந்த அந்த திருமணத்தின் போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
தீபிகாவை விட ராஜா வெற்றி பிரபு வயதில் குறைந்தவர் என ஒரு செய்தி இணையத்தில் பரவி வந்தது. அதற்கு தற்போது தீபிகா விளக்கம் அளித்து இருக்கிறார்.
"நான் பெரிய பெண் எல்லாம் கிடையாது. விக்கிபீடியாவில் நான் 1995 பிறந்தவர் என்றும், அவர் 1998ல் பிறந்தவர் என தவறாக இருக்கிறது."
"உண்மையில் நான் 1997ல் பிறந்தேன், அவர் 1996. மொத்தம் ஒரு வருடம் 10 மாதங்கள் ராஜா வெற்றி பிரபு என்னை விட பெரியவன்" என தீபிகா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.