பொய் செய்தி பரப்புபவர்கள் ஒரு நல்ல புகைப்படமாவது போடுங்கள்: கிருத்திகா உதயநிதி
என்னைப் பற்றி போய் செய்தி பரப்புபவர்கள் அந்த செய்தி உடன் ஒரு நல்ல புகைப்படத்தையாவது போடுங்கள் என கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை தமிழகத்தில் முக்கிய நிறுவனங்களில் சோதனை நடத்தி வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை, கல்லல் குழுமத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பெறப்பட்டதை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கல்லல் குழுமத்திற்கு சொந்தமான 36 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கி கணக்கில் உள்ள 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை செய்திக் குறிப்பில் , M/S Udhayanidhi stalin Foundation என்ற இடம்பெற்றிருந்ததை கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்கு என சமூக ஊடகங்களில் சிலர் பதிவு செய்து வருகின்றனர். இதனை அடுத்த கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் என்னைப் பற்றி தவறான தகவல் மற்றும் போலி செய்திகளை பரப்புபவர்கள் குறைந்தபட்சம் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.