இரண்டு மகன்களுடன் சிஎஸ்கே மேட்ச் பார்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படங்கள்..!

இரண்டு மகன்களுடன் சிஎஸ்கே மேட்ச் பார்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படங்கள்..!

நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியை தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பார்த்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இரண்டு மகன்களுடன் மேட்ச் பார்த்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது. இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் நேற்று நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் சிஎஸ்கே அணி வீரர்கள் அபாரமாக விளையாடி குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர். இதனை அடுத்து 10வது முறையாக சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇந்த நிலையில் நேற்றைய போட்டியை திரையுலக பிரபலங்கள் பலர் பார்த்தனர். குறிப்பாக உதயநிதி, அருள்நிதி, வரலட்சுமி ஆகியவர்கள் மேட்ச் நடக்கும் போது நேரலையில் காணப்பட்டார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இரண்டு மகன்களுடன் மேட்ச் பார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.மேலும் இந்த போட்டி குறித்து அவர் கூறிய போது ’என்ன ஒரு போட்டி..! சொந்த மைதானத்தில் எங்கள் சிஎஸ்கே வெற்றி பெறுவதை பார்த்து எனது மகன்கள் மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். இறுதிப் போட்டிக்கு இதோ வந்து விட்டோம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES